முதல்வரின் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்திய மாவட்ட ஆட்சியரை நடுரோட்டில் கண்டித்த அசாம் முதல்வர்

0 3984

தனது வருகைக்காக போக்குவரத்தை நிறுத்திய மாவட்ட ஆட்சியரை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நடு ரோட்டில் கண்டித்தார்.

நாகோன் மாவட்டத்திற்குச் சென்ற ஹிமாந்தாவுக்காக குமோதகான் என்ற இடத்தில் அம்மாவட்ட ஆட்சியர் போக்குவரத்தை நிறுத்தினார். இதனைக் கண்ட ஹிமந்தா சாலையில் இறங்கி, தனது வருகையின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று தெளிவான அறிவுறுத்தல் இருந்தபோதிலும், தனக்காக போக்குவரத்தை நிறுத்தியதற்காக மாவட்ட ஆட்சியரை நடுரோட்டில் திட்டித் தீர்த்தார்.

தனது வருகைக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், இந்த விஐபி கலாச்சாரம் அசாமிற்கு ஏற்றதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments