அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் பரவல் உச்சத்தை எட்டும் - கேரள அரசு
அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் பரவல் உச்சத்தை எட்டும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலும் இரண்டாவதுமான கொரோனா பேரலையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா.இம்முறை டெல்டா மற்றும் ஒமைக்கரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள போதும் கேரளாவில் கட்டுப்பாட்டுடனே இருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், கொரோனா பரவல் 3 வாரங்களுக்குள் உச்சத்தை எட்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தினசரி பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மூன்று வாரத்தில் அது மிகவும் வேகமாகப் பரவி விடும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
Comments