அசாமில் 2டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
அசாமில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு இன்று முதல் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, அசாமில் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இன்று முதல் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.
மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், மக்கள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
Comments