மும்பை, டெல்லி ,கொல்கத்தாவில் குறையத் தொடங்கிய ஒமைக்கரான் பாதிப்புகள்

0 4089

டெல்லியிலும் மும்பையிலும் ஒமைக்கரான் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன.

கொல்கத்தாவிலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கோவிட் பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. டெல்லியில் புதிதாக நேற்று 20 ஆயிரத்து 718 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதனைகளும் குறைந்துள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 42 ஆயிரத்து 463 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மும்பையில் மட்டும் பத்தாயிரம் பேர் கொரோனா பாதிப்பை அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதே போல் பெங்களூரிலும் கொல்கத்தாவிலும் பாதிப்புகள் குறைந்து வருவதாக அந்தந்த மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments