உ.பி. தேர்தல் - 107 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 107 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆளும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் முதல் கட்ட தேர்தல் 58 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில் 57 பெயர்களைக் கொண்ட பட்டியலும், 55 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான 48 பெயர்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே 5 முறை கோராக்பூரில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். அதேபோல துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா சிராது தொகுதியில் களம் காண்கின்றார்.
Comments