கரூரில் பைக் பந்தயம் நடத்த முயன்ற 9 பேரை கைது செய்த காவல்துறையினர்.!
கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் பந்தயம் நடத்த முயன்ற 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்ததுடன், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
வெங்கக்கல்பட்டியில் இரு சக்கர வாகனப் பந்தயம் நடத்த உள்ளதாகத் தகவல் கிடைத்ததால் காவல்துறையினர் ரோந்து சென்றனர். ஏமூர் பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்துடன் நின்ற இளைஞர்களிடம் விசாரித்ததில், அவர்கள் பந்தயத்துக்காக வந்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து 9 பேரைக் கைது செய்ததுடன், 2 ரேஸ் பைக்குகள், மற்றொரு பைக், 6 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
Comments