குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24,000 பேருக்கு அனுமதி?

0 4020

இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும், வெளிநாட்டு விருந்தினர்களின்றி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் ஆண்டுதோறும் அந்நாளில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில்,19 ஆயிரம் அரசு சார்பில் அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், கடந்த ஆண்டை போல இந்தாண்டும் வெளிநாட்டு விருந்தினர்களின்றி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்படும் நிலையில், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மட்டும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments