சமாஜ்வாதிக் கட்சி, பீம் ஆர்மி கூட்டணிப் பேச்சு முறிவு.!

0 4278

சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பட்டியலினத்தவரைக் கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை என்றும், அவர்களின் வாக்குகளை மட்டும் பெற விரும்புவதாகவும் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டணியாகப் போட்டியிடுவது குறித்துக் கடந்த சில நாட்களாகச் சந்திர சேகர ஆசாத் பேச்சு நடத்தி வந்தார்.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டியலினத்தவரைக் கூட்டணியில் சேர்க்க அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை என்றும், ஒரு மாதமாக முயன்றும் கூட்டணி அமைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments