ஆண்டுதோறும் ஜனவரி 16 தேசிய ஸ்டார்ட் அப் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் - பிரதமர் மோடி
ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் நாள் தேசிய ஸ்டார்ட் அப் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கி ஆறாண்டு நிறைவையொட்டிப் புதிய தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோருடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார்.
அப்போது, புதிய தொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். இந்திய விடுதலையின் நூறாண்டைக் கொண்டாடும்போது, புதிய தொழில் நிறுவனங்கள் முதன்மையான பங்காற்றும் என்றும், நமது கண்டுபிடிப்பாளர்களால் நாடே பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தார்.
புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, புதிய நிறுவனங்கள் வளரும் சூழலை உருவாக்கல் ஆகியவற்றால் இந்தியாவுக்கு இந்தப் பத்தாண்டு தொழில்நுட்பத்தின் பத்தாண்டாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments