காசிமேடு துறைமுகத்தில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள், வியாபாரிகள்!

0 4283

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இன்றே மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர்.

மீன் வரத்து குறைவாகவே இருந்ததால் மீன்கள் விலை அதிகமாக இருந்த நிலையிலும், போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர். நெத்திலி கிலோ 200 ரூபாய்க்கும், வவ்வால் கிலோ 800 ரூபாய்க்கும், கடம்பா, இறால், நண்டு உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.

இதேபோல், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கடலூர் துறைமுகத்தில் இன்று அதிகாலையிலேயே, வியாபரிகளும், பொதுமக்களும் மீன் வாங்க குவிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments