திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு - மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளர் பலி
திருச்சி பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் பலத்த காயமடைந்த அதன் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர், போட்டியில் பங்கேற்பதற்காக தனது காளையை அவிழ்த்துக் கொண்டு வந்து வரிசையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மிரண்டு போன காளை, தனது கொம்பால் மீனாட்சி சுந்தரத்தின் வயிறு, தொடையில் குத்தி கிழித்தது.
பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தாம் வளர்த்த காளையே அவரை குத்தியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, சிறு, சிறு காயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Comments