ராணுவ தினத்தையொட்டி பிரமாண்ட தேசியக்கொடி, ராஜஸ்தானில் இந்திய எல்லையில் இன்று காட்சிக்கு வைக்க ஏற்பாடு
தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் காட்சிப்படுத்தப்படுகிறது.
இன்று தேசிய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போர் நடந்த லாங்வாலா பகுதியில், கதரால் செய்யப்பட்ட உலகின் பெரிய இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படுகிறது.
225 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் ஏறத்தாழ ஆயிரத்து 400 கிலோ கொண்ட தேசியக் கொடி 5-வது முறையாக பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுவதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments