ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 26ம் தேதிக்கு முன் இதற்கான அதிகாரப்பூர்வமானஅறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல லட்டம் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால காத்திருப்பும் கோரிக்கையும் நிறைவேற உள்ளது. குறைந்த பட்ச ஊதிய வரம்பு உயர்த்தப்படவும் இதில் வாய்ப்பு உள்ளது.
குறைந்த பட்சம் ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் ஆக உள்ள நிலையில் அதனை 26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. இன்று 46 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் 8 ஆயிரம் ரூபாய் உயர்வு கிடைக்கும்.
Comments