தென்கொரியாவில் பயன்பாட்டிற்கு வந்த ஃபைசரின் "பேக்ஸ்லோவிட்"
தென்கொரியாவில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரையான பேக்ஸ்லோவிட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் இறப்பையும் 90 சதவீதம் இந்த மாத்திரை குறைக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசியாவிலேயே முதல் முறையாக தென்கொரியா அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
நேற்று முதற்கட்டமாக, சுமார் 21 ஆயிரம் பேருக்கு பயன்படும் வகையில் 6 லட்சத்து 30 ஆயிரம் மாத்திரைகள் விமானம் மூலமாக வந்தடைந்த நிலையில் அவை மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகளை பெற தீவிர தொற்று பாதிப்புடையவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உடைய 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
Comments