உரிய மருத்துவ பரிசோதனைகள் இன்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது - சுகாதாரத்துறை செயலாளர்

0 4240

உரிய மருத்துவ பரிசோதனைகள் இன்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் மரணம் அடைபவர்களின் தகவல்களை தினசரி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் மரணம், டெங்கு உள்ளிட்ட நோய் தொடர்பான மரணம் மற்றும் பரவல்களை கண்டறிந்து உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, கல்வி, உள்ளாட்சித்துறை,  சமூக நலத்துறை பணியாளர்களை கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments