காசிப்பூர் சந்தையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு.!
டெல்லி காசிப்பூர் பூச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததைக் காவல்துறையினர் கண்டெடுத்து அகற்றிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று வெடிக்கச் செய்துள்ளனர்.
டெல்லி காசிப்பூர் பூச்சந்தையில் ஒரு பை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அது குறித்துக் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையின் வெடிகுண்டு வல்லுநர்கள் அப்பகுதிக்கு விரைந்துசென்று பையைச் சோதித்தனர்.
அதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வெடிகுண்டை ஆளில்லாத பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசென்ற தேசியப் பாதுகாப்புக் காவலர்கள் வெடிக்கச் செய்து அழித்தனர்.
Comments