ஜனவரி 31 அன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் நாள் தொடங்கும் என்றும், பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார். பிப்ரவரி முதல் நாளில் 2022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11ஆம் நாள் நிறைவடையும் என்றும், இரண்டாவது அமர்வு மார்ச் 14ஆம் நாள் தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18ஆம் நாள் ஹோலியையொட்டி விடுமுறை என்றும், ஏப்ரல் எட்டாம் நாள் கூட்டத்தொடர் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments