பொங்கல் திருநாளையொட்டித் தமிழ் மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

0 3958

பொங்கல் திருநாளையொட்டித் தமிழ் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் தமிழில் விடுத்துள்ள செய்தியில், தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகப் பொங்கல் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு வாய்ந்த நாளில் அனைவருக்கும் குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கையுடனான நமது பிணைப்பும், நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்குப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மக் பிகு, மகர சங்கராந்தி, உத்தராயனம் விழாக்களையொட்டியும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments