ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

0 5276

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது வீட்டுக்கு முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

காலை முதலே போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர்கள், எலுமிச்சைப்பழத்தில் சூடம் ஏற்றி, ரஜினியின் பெயர் பலகைக்கும், வீட்டுக்கும் தீபாரதனை காட்டினர்.

தொடர்ந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ரசிகர்களும் ஆரவாரம் எழுப்பி வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினர்.

முன்னதாக குரல் பதிவு மூலமாகவும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments