லடாக் பிரச்னை குறித்து இந்தியா, சீனா இடையிலான 14வது சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தகவல்
லடாக் பிரச்னை குறித்து இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 14வது சுற்று பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 12ம் தேதி தொடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித்துள்ளது. முன்னதாக பாங்கோங் ஏரி, கோக்ரா மற்றும் கல்வான் போன்ற இடங்களைத் தொடர்ந்து ஹாட்ஸ்பிரிங் பகுதியில் படைகளைக் குறைக்கவும், டெப்சாங் மற்றும் டெம்சோக் போன்ற இடங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதில் சீனாவுடன் எந்த உடன்பாடும் ஏற்படாததால் லடாக் பகுதியில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments