பூடான் எல்லையில் சீனா 2 புதிய கிராமங்கள் கட்டமைப்பு...அதிக தெளிவுத்திறன் கொண்ட சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியீடு
பூடான் எல்லைக்குட்பட்ட டோக்லாம் அருகில் 2 புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளதாக அதிக தெளிவுத் திறன் கொண்ட சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
2017ஆம் ஆண்டு இந்தியா, சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட சிக்கிம், பூடான், திபெத் எல்லைகள் ஒன்றுகூடும் டோக்லாம் பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட 2 கிராமங்களை சீனா கட்டமைத்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கிராமங்களை சீனா கட்டமைத்ததாக சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகின. இந்திய ராணுவத்தின் செயல்பாடு, மற்றும் முக்கியமான பகுதிகளை தெளிவாக கண்காணிக்கக்கூடிய வகையில் சீனா தனது ராணுவக் கட்டமைப்புகளை நிறுவி வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.
Comments