கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் தென்கொரியாவில் இறக்குமதி
கொரோனா இறப்பு விகிதத்தை 90 சதவீதம் வரை குறைப்பதாக கருதப்படும் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் மூலம், தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, முதற்கட்டமாக சுமார் 21 ஆயிரம் Paxlovid மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைவான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த மாத்திரைகளை அவசர கால சிகிச்சைக்கு பயன்படுத்த தென் கொரியா ஒப்புதல் வழங்கியது.
Comments