சென்னை மாநகராட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 3553
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 521ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 521ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே தெருவில் 5-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தபப்ட்ட பகுதிகள் எண்ணிக்கை 521ஆக அதிகரித்ததை அடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 1690 பேரிடம் இருந்து 3லட்சத்து 51ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் தேதி முதல் இதுவரையில் மொத்தமாக 40லட்சத்து 20ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments