மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிய குழந்தையை முதலுதவி அளித்து காப்பாற்றிய ரோந்து போலீஸார்..
அர்ஜெண்டினாவில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிய குழந்தையை பார்த்த ரோந்து போலீசார் உடனடியாக மருத்துவ முதலுதவி அளித்த வீடியோ வெளியாகியுள்ளது.
பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் ஸான் மிகுவல் நகரத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிய 18 மாத குழந்தையை பிடித்துக்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் கதறிய படி நின்ற தாயை பார்த்தனர்.
உடனே அவர்களை ரோந்து வாகனத்தில் ஏற்றிய காவலர்கள் , குழந்தைக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தை தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments