ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று திருச்சி மத்தியச் சிறையில் இருந்து வெளியில் வந்தார் ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் இன்று திருச்சி மத்தியச் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடம் மொத்தம் மூன்று கோடி ரூபாய் வாங்கிவிட்டுத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திர பாலாஜி மீது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை ஜனவரி ஐந்தாம் நாள் கர்நாடகத்தின் ஹசனில் காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு 4 வாரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாஸ்போர்ட்டைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், காவல்நிலையத்தில் நாள்தோறும் கையொப்பமிட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தது.
ஜாமீன் உத்தரவு நகலைச் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழக்கறிஞர்கள் வழங்கியதை அடுத்து, ராஜேந்திர பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். பின்னர், தனியார் விடுதியில் சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு அவர் சிவகாசிக்கு காரில் புறப்பட்டார்.
Comments