இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கார்சிட்டியை நியமனம் செய்ய செனட் குழு ஒப்புதல்

0 3268
இந்தியாவிற்கான, அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் ’எரிக் கார்சிட்டி’ ( Eric Garcetti’s)யை நியமிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிற்கான, அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் ’எரிக் கார்சிட்டி’ ( Eric Garcetti’s)யை நியமிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரையின் பேரில், எரிக் கார்சேட்டியை நியமிப்பது குறித்த செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதில் பெரும்பான்மை வாக்குகளை பெறும் பட்சத்தில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக எரிக் கார்சேட்டி நியமனம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2013 முதல் லாஸ் ஏஞ்சலஸ் மேயராகவும், நகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் ’எரிக் கார்சிட்டி’, கடந்த 12 ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் உளவுத்துறை அதிகாரியாகவும், பாதுகாப்புத்துறையின் உளவுப்பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments