சொத்து விவரங்களை தாக்கல் செய்யாவிடில் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

0 4243
அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் உரிய நேரத்தில் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் உரிய நேரத்தில் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறை செயலாளர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு  மத்தியப் பணியாளர் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி அல்லது ஜனவரி 15-ஆம் தேதிக்குள் தங்களின் அசையா சொத்து விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த பதவி நிலை உயர்வு மற்றும் ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வசதியாக முந்தைய ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள்  ஐஏஎஸ் அதிகாரிகள்சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments