12 வயது சிறுமிக்கு முறையற்ற சிகிச்சை.. மருத்துவர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவு
சண்டிகரில் எஸ்.ஜே. சிண்ட்ரோம் (SJ syndrome) என்ற தோல் நோய் பாதித்த சிறுமிக்கு முறையற்ற சிகிச்சை வழங்கிய வழக்கில், நோயாளிக்கு 10 லட்ச ரூபாயை மருத்துவர் இழப்பீடாக வழங்க வேண்டுமென தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு எஸ்.ஜே. சிண்ட்ரோம் பாதித்த 12 வயது சிறுமிக்கு, மருத்துவர் பி.எஸ்.சிங்களா அம்மை நோய்க்கான சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த வழக்கில் நோயாளிக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி நோயாளி மேல் முறையீடு செய்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின், இழப்பீடை 10 லட்ச ரூபாயாக அதிகரித்து தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Comments