காதல் மனைவியிடம் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்திய கணவன் கொலை..! சந்தேகத்துக்கு கத்தியால் முற்றுப்புள்ளி

0 5252
காதல் மனைவியிடம் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்திய கணவன் கொலை..! சந்தேகத்துக்கு கத்தியால் முற்றுப்புள்ளி

திருக்கோவிலூர் அருகே 3-வது முறையாக கர்ப்பமான காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கருவைக் கலைக்க சொல்லி வற்புறுத்திய குடிகாரக் கணவனை, மனைவியே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்த போது சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

கடந்த 8 மாதங்களாக விழுப்புரம் நாயக்கன் தோப்புப் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்த சந்தோஷ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி சுரேகாவிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார். சுரேகா 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கர்ப்பத்துக்கு யார் காரணம் ? எனக் கேட்டு சந்தோஷ் அடித்து உதைத்துள்ளார். மேலும் அவரிடம் கருவைக் கலைக்கச் சொல்லி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று கணவன் அடித்து உதைத்ததால் ஆத்திரமடைந்த சுரேகா, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, சந்தோஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்த சந்தோஷ், ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பலியானார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸார், இறந்தவர் உடலை மீட்டு, பிணகூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேகாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments