திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. விழாக் கோலம் பூண்டது திருப்பதி..

0 3419
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நள்ளிரவு 12.36 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்க வாசலில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இதனை ஒட்டி 4 டன் மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். காலை 6 மணி முதல் 300 ரூபாய் தரிசனம் டிக்கட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் இன்று காலை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டதால், 8 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக 30 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக 200 பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்கவாசலுக்கு பல்வேறு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு கோவில் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments