பெண் பற்றி இழிவாகப் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

0 5833

பெண் ஒருவரைப் பற்றி இழிவாகப் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ், தன்னுடன் தவறான தொடர்பில் இருக்கும் இன்னாசி அம்மாள் என்ற பெண்ணுடன் பேசுவது போன்ற ஆடியோக்கள் வெளியாகின. அந்த ஆடியோக்களில் ஒன்றில் அக்கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரான ரீட்டா என்ற பெண்ணைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது போன்று பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ரீட்டா அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ மான்ராஜ், இன்னாசி அம்மாள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னாசி அம்மாள் மட்டும் கைதாகியுள்ள நிலையில், மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments