புகையில்லா போகி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும்... சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்
தமிழகத்தில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறார். பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற பொருட்களை எரிக்காமல், சுற்றுச்சூழல் மாசுபடாத போகிப் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், சென்னையில் 15 மண்டலங்களில் காற்று தரத்தினை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
Comments