இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த இரு சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்திப்பு

0 4277

இந்தியா, பாகிஸ்தானில் வசித்து வரும் 2 முதிய சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்து மகிழ்ந்தனர்.

1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது குழந்தையாக இருந்த அவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். முகமது சித்திக் என்பவர் பாகிஸ்தானின் பைஸ்லாபாத்திலும், அவரது அண்ணனான முகமது ஹபீப் என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலும் வசித்து வந்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் உதவியால் அவர்களது இருப்பிடங்களை அறிந்த உறவினர்கள், இருவரையும் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்துவாராவில் சகோதரர்கள் நேரில் சந்தித்தனர். 74 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கட்டிப்பிடித்து கண் கலங்கினர். அந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments