"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர்
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுகாதார அமைச்சக மாநாட்டில் பேசிய அவர் இதனை கூறினார். உலகம் முழுவதும் இதுவரை 115 பேர் ஒமைக்ரானுக்கு பலியாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் இந்தியர் என்று அவர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் புள்ளி விவரங்களின் படி, டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவாகவே இருப்பதாக கூறிய அவர், ஐரோப்பாவில் மொத்தம் 8 நாடுகளில் கடந்த 2 வாரங்களில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட 2 மடங்கு உயர்ந்துள்ளது என்றார்.
Comments