விழுப்புரத்தில் நியாயவிலைக்கடையில் ரூ.1.17 லட்சம் முறைகேடு கண்டுபிடிப்பு..!

0 12325

விழுப்புரத்தில் நியாயவிலைக்கடையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு கண்டறியப்பட்ட நிலையில், கடையின் விற்பனையாளருக்கு அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

விராட்டிக்குப்பம் கூட்டுறவு பண்டகச் சாலை 14 ஆவது நியாய விலைக் கடையில் விழுப்புரம் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்தக் கடையில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தது தெரிய வந்தது. கடையின் விற்பனையாளர் பிரியா அதற்கான உரிய விளக்கத்தை அளிக்காத நிலையில், அதே தொகையை அவருக்கு அபராதமாக விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments