தமிழகத்தில் 3 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்

0 6614

தமிழகத்தில் 3 அமைச்சர்கள் வசம் இருந்த இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் பிரிவு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த விமான நிலையங்கள் நிர்வாகப்பிரிவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி. கணேசன் வசம் இருந்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு கழகம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் சென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments