போகி பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை எரிக்கக் கூடாது... மீறினால் 1000 ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தவிர்க்க, போகி பண்டிகையன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகி பண்டிகையன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொதுமக்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து கழிப்பது வழக்கம்.
இந்த நிலையில், சென்னையில் மாசு ஏற்படுவதை தடுக்க, விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு எரித்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Comments