ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் பண மோசடி செய்த விவகாரத்தில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சுமார் 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை, கடந்த 5-ந்தேதி கர்நாடகாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு, பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
Comments