கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார்.
கடந்த ஒரு வாரத்தில் 2 முறை, தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து வட கொரியா எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில், ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாகவும் அதிபர் கிம் அதனை நேரில் பார்வையிட்டதாகவும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹைப்பர்சோனிக் ஆயுத அமைப்பின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப சரிபார்ப்பை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
Comments