அமெரிக்காவில் தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

0 3097
அமெரிக்காவில் மருத்துவ ஹெலிக்காப்டர் ஒன்று தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிக்காப்டர் ஒன்று தேவாலயம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை உட்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

நோய்வாய்ப்பட்ட குழந்தையை, ஒரு செவிலியர் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் 2 பேர், மருத்துவ ஹெலிக்காப்டரில் நேற்று மதியம் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் மாகாணத்தின் மேற்குப்பகுதியில் குடியிருப்புகளிடையே அமைந்துள்ள தேவாலயம் அருகே அந்த ஹெலிக்காப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

இதில் உள்ளே இருந்த குழந்தை உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments