சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்.. மகிழ்ச்சி அளிப்பதாக சாய்னா கருத்து

0 3679
நடிகர் சித்தார்த் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சியளிப்பதாக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சித்தார்த் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சியளிப்பதாக பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்திருந்த சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு, நடிகர் சித்தார்த் கூறிய பதில் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெண்களை இழிவு படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், முரட்டுத்தனமான தமது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருவதாகவும், உள்நோக்கத்துடன் கூறவில்லை எனவும் சித்தார்த் கூறியிருந்தார். 

இந்த நிலையில், தனது தவறை உணர்ந்து சித்தார்த் மன்னிப்பு கோரியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சாய்னா நேவால் கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments