இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழகத்தில் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பதிவு மையத்தை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் சென்னையில் 21ஆயிரம் பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் virtual Monitor முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொங்கல் பண்டிகை காரணமாக இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும், இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என 2011ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது எனவும், அதிமுகவால் தான் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்று மார்தட்டி கொள்வதில் எந்த நியாயமும் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.
Comments