குவாரண்டைன் என்ற பெயரில் மக்களை வதைக்கும் சீனா.! மிகச் சிறிய அறைகளில் அடைத்து அட்டூழியம்..
சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட மக்கள் மிகச் சிறிய தனிமைப்படுத்துதல் அறைகளில் அடைக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
சீனாவில் குறைந்த அளவிலான கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அன்யாங் நகரத்தில் 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்துக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Xi'an நகரின் குவாரன்டைன் முகாம்களில் மிகச் சிறிய அறைகளில் அடைக்கப்படும் மக்கள் இரண்டு வாரங்கள் தங்கி இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள Xi'an நகரில் உணவு வாங்க வெளியே வந்த நபரை முன் களப்பணியாளர்கள் தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பீஜிங்கில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்க கடுமையான கோவிட் தடுப்பு விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments