அரசுப்பள்ளிக்கு ரூ.1லட்சம் நன்கொடை கொடுத்த இளநீர் விற்கும் பெண்.. கணவன், குழந்தைகள் படித்த பள்ளிக்கு உதவுவதில் பெருமையாக உள்ளதாக தகவல்

0 2430
திருப்பூர் அருகே இளநீர் விற்கும் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகள் படித்த அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாயினை நன்கொடையாக தந்துள்ளார்.

திருப்பூர் அருகே இளநீர் விற்கும் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகள் படித்த அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாயினை நன்கொடையாக தந்துள்ளார்.

சின்னவீரம்பட்டியில் உடுமலை - திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண் கணவருடன் இணைந்து இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்ற தாயம்மாள் அங்கு கட்டிட பணிகள் நடைபெறுவதை பார்த்து தானும் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி புரிந்துள்ளார். அவரது இந்த சேவை பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments