சேலத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.20 லட்சம் பயிர்க்கடன் வழங்கி முறைகேடு

0 12421

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, இறந்தவரின் பெயரில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில், கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன்களில் முறைகேடு உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில், 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த வேட்டுவப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவரின் பெயரில் கடந்த 2019-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கி சங்க செயலாளர் மோகன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது குறித்த விசாரணையில், டிசம்பர் 10-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ராமசாமிக்கு சம்மன் அனுப்பியுள்ளார். இதையடுத்து, ராமசாமியின் மகன் சித்துராஜ் என்பவர் ஜனவரி 10-ந் தேதி நேரில் ஆஜராகி தந்தை இறப்பு சான்றிதழ்களை வழங்கி, முறைகேடு ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments