பாதுகாப்புப் படை வீரர்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா... 1,000 பேருக்கு கொரோனா உறுதி
நாட்டின் துணைராணுவப் படை வீரர்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 200 வீரர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், ஆயிரத்து 500 பேரும், சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஆயிரத்து 100 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் கமாண்டோ படையினர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா உறுதி செயப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments