சென்னையில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து

0 2885

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50சதவீதம் வார்டு ஒதுக்கீடு செய்யும் அரசின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் பொது பிரிவிற்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க உத்தரவிட கோரி வழக்கு விசாரணைக்கு வந்த போது, போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக இடங்கள் வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியலைமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதால், அதை மீறக்கூடாது என தெரிவித்ததோடு, மண்டல வாரியாக வார்டு ஒதுக்கீடு செய்யும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்தார்.

மேலும், மொத்த வார்டுகளின் அடிப்படையில் தான் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments