பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஹிந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பது ஏன்? அமைச்சர் விளக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள கோதுமை, ரவை போன்ற பொருட்கள் வட மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாகவும் அரசின் நிர்வாக நடைமுறைகள் தெரிந்தும் அது குறித்து குறை கூறிவருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் சில பொருட்களின் பெயர்கள், இந்தி மொழியில் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டிய நிலையில், சக்கரபாணி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றி அதிமுகவினர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments