பேருந்து நிலையத்தில் தவறுதலாக குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்- 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

0 2950

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர் சென்ற தம்பதி 3 வயது குழந்தையை தவறுதலாக பேருந்து நிலையத்திலேயே விட்டுச் சென்ற நிலையில், அக்குழந்தையை மீட்ட போலீசார் ஒரு மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பாவக்கல் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பு, அவரது தாய் , தந்தை, மனைவி மற்றும் 3 வயது மகன் சபரி ஆகியோர் சொந்த கிராமம் செல்ல அரூர் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். இந்நிலையில், தம்பதியரில் ஒருவர் பேருந்தின் முன் படிக்கட்டு வழியாகவும், மற்றொருவர் பின் பக்கமும் ஏறிய அவர்கள், குழந்தை யாருடனேனும் பேருந்தில் இருக்கிறான் என நினைத்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அண்டியூர் அருகே சென்ற அவர்களுக்கு குழந்தை காணவில்லை எனத் தெரிய வந்த நிலையில், உடனே அங்கிருந்து அரூர் பேருந்து நிலையம் திரும்பினர். அதற்குள் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அதிவிரைவு படையினர் குழந்தையை மீட்டு பெற்றோர் வரும் வரை பாதுகாத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments