பழனி தைப்பூசம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பழனி முருகன் கோயிலில் நாளை முதல் பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி முதல், திருக்கல்யாணம், தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகள் வலைதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் .
Comments